நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் நடப்பு ஆண்டு நிதி அறிக்கையில் தனது ETH மற்றும் BTC ஹோல்டிங்க்ஸை மறைத்ததாக புகார் எழுந்துள்ளது
நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் நடப்பு ஆண்டு நிதி அறிக்கையில் தனது ETH மற்றும் BTC ஹோல்டிங்க்ஸை மறைத்ததாக புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் நியூயார்க் நகரத்தின் கிரிப்டோ-ப்ரெண்ட்லி மேயர் எரிக்
ஆடம்ஸ் தனது நிதியறிக்கையில் தனது சொத்து மதிப்புகள் கிரிப்டோ உட்பட
அனைத்தையம் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அதற்க்கான படிவத்தில்,
அவர் கிரிப்டோ கரன்சிகள் இல்லை என குறிப்பிட்டுருந்தார்.
கடத்த ஆண்டு ஜனவரி மாதம் 30000 டாலர் மதிப்புடைய BTC மற்றும் ETH
காசோலைகளை எரிக் ஆடம்ஸ் பெற்றிருந்தார். இந்த இரண்டு
கிரிப்டோகரன்சிகளும் மார்க்கெட்டில் அதிக மதிப்பில் இருந்த போதும் அதை
அவர் பயன்படுத்தாமல், இன்னும் தன கையிருப்பில் வைத்திருப்பதாக அதே
ஆண்டு நவம்பர் மாதம் கூறினார்.
பங்குகள், பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் என படிவத்தில் உள்ள கேள்விகளை
மேயர் சரியாக புரிந்து கொள்ளவில்லையென ஜனநாயக கட்சியின் செய்தி
தொடர்பாளர் ஃபேபியன் லெவியின் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் 2022 நவம்பர் இல் அவரிடம் இருந்த
கிரிப்டோவின் அசல் மதிப்புகள் தெரியும் அளவில் அவர் படிவத்தில்
திருத்துவார் என கூறினார்.
இந்த தவறை கண்டறித்த மேயர் தனது செய்தி தொடர்பாளர் மூலமாக
ஜூலை 13 ஆம் தேதியன்று டெய்லி நியூஸ் செய்தியாளரிடம் தனது
அனைத்து கிரிப்டோ ஹோல்டிங்சையும் நிதி அறிக்கையில் வருமாறு
திறுத்துவதாக கூறினார்.
மேயர் எரிக் ஆடம்ஸ் தவறாக இல்லை எனக் குறிப்பிட்டுருந்தாலும், அவர்
அலுவலகத்தில் உள்ள இருண்டு வேலையாட்கள் அவர்களது நிதி
அறிக்கையில் கிரிப்டோ ஹோல்டிங்சை சரியாக குறிப்பிட்டிருந்தனர் என்பது
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.