பாங்க் ஆஃப் அமெரிக்காவிற்கு $350 மில்லியன் அபராதம் விதித்த நுகர்வோர் நிதிப் பாதுகாப்புப் பணியகம் (CFPB)
பாங்க் ஆஃப் அமெரிக்காவிற்கு $350 மில்லியன் அபராதம் விதித்த
நுகர்வோர் நிதிப் பாதுகாப்புப் பணியகம் (CFPB)
Coinbase பயனர் ஒருவர் பிட்காயின் பரிவர்த்தனைகள் மூலம் தனது வங்கி
கணக்கை பாங்க் ஆஃப் அமெரிக்கா மூடிவிட்டதாக கூறினார்.
Coinbase தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஆம்ஸ்ட்ராங் இது போன்ற
பிட்காயின் பரிவர்த்தனைக் கணக்குகள் தொடர்ந்து மூடப்படுவது குறித்து
கேள்விகளை எலும்பினார்.
அப்பொழுது Stacks இன் இணை நிறுவனர் முனீப் அலி, அவரது 15 வருட
பழைய கணக்கு எதிர்பாராத விதமாக மூடப்பட்டதாக ட்விட்டரில்
தெரிவித்தார், இது அவரது பிட்காயின் பரிவர்த்தனைகள் காரணமாக
இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக கூறினார்.
சில coinbase பயனர்கள் பிட்காயின் பரிவர்த்தனைகளுக்குப் பிறகு கணக்கு
மூடப்பட்டது அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டது என தங்கள்
அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இதன் எதிரொலியாக நுகர்வோர் நிதிப் பாதுகாப்புப் பணியகம் (CFPB)
ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்காவில்
ஆய்வுகளை மேற்கொண்டது.
இதில் சட்டவிரோதமாக குப்பைக் கட்டணம் (junk fee) வசூலித்ததற்காகவும்,
கிரெடிட் கார்டு வெகுமதிகளை நிறுத்திவைத்ததற்காகவும், போலி
கணக்குகளைத் திறந்ததற்காகவும் இரண்டு நிறுவன ஏஜென்சிகளுக்கு $150
மில்லியன் அபராதமும், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு $100 மில்லியன்
அபராதமும் உடனடியாக செலுத்த வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.