அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடன் ஐந்து வருட ஒப்பந்தத்தை பாதியில் நிறுத்திய BINANCE நிறுவனம்
அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடன் ஐந்து வருட ஒப்பந்தத்தை பாதியில் நிறுத்திய BINANCE நிறுவனம்.
கடந்த ஜனவரி 2022 ஆம் ஆண்டு அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடன்
BINANCE நிறுவனம் ஒரு ஐந்தாண்டு ஒப்பந்த்தில் கையெழுத்திட்டது.
அதன்படி BINANCE அர்ஜென்டினாவின் தேசிய கால்பந்து அணியின் முக்கிய
ஆதரவாளராகவும், அதன் தேசிய கால்பந்து லீக்கின் பெயரிடும்
ஸ்பான்சராகவும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடரலாம் என ஒப்பந்தம் செய்து
கொண்டது.
ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி
அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடனான தனது கூட்டாண்மையை Binance
முடித்துக்கொண்டது.
முன்பு Binance வுடன் கூட்டு சேர்வதற்காக Socios என்ற ரசிகர் டோக்கன்
தளத்துடனான ஒப்பந்தத்தை, அர்ஜென்டினா கால்பந்து சங்கம் பாதியில்
நிறுத்தியபோது பல சர்ச்சைகல் எழுந்தது.
Socios உடனான சட்டப்பூர்வ தகராறு இருந்தபோதிலும், அர்ஜென்டினா
கால்பந்து சங்கத்துடன் அதிகாரப்பூர்வ ரசிகர் டோக்கனின் பிரத்யேக
வழங்குநராக Binance இருந்து வந்தது.
ஆனால் உலகெங்கிலும் உள்ள Binance கூட்டாண்மைகளின் முடிவுகளை
மதிப்பீடு செய்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Binance
தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நேரம் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும்,
அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அதன் ஒப்பந்தக் கடமைகளை
முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை எனவும் இது எங்கள் வணிக
மதிப்புகள் மற்றும் எங்கள் கூட்டாண்மைக் கொள்கைகளுக்கு முரணானது
என்றும் Binance தரப்பில் கூறப்பட்டுள்ளது.