ரோபோ ஸ்பேமின் புதிய சகாப்தம் | New Era of AI bots Tamil
AI ஆல்
இயக்கப்படும் மொழியியல் ரோபோக்களால் (linguistic robots) மனித தொடர்பியல் (communication) அமைப்புகள் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கின்றன.
இந்த BOTகளால் மனித மொழியை உருவகப்படுத்த முடியும். இதனால் உண்மையான உரையாடல்களையும்
botகளால் உருவாக்கப்பட்ட உரையாடல்களையும் வேறு படுத்தி காண்பது
கடினமான இருக்கும். மேலும் இந்த botகள் தானாக முன்னேறும் திறன்
கொண்டவையாக இருப்பதால் நாளுக்கு நாள் அதன் திறன் அதிகரித்து கொண்டே செல்லும். இதனால் online
discourse மற்றும் தகவல் தொடர்பு தளங்களில் நம்பிக்கையின்மையை அதிகரிக்கின்றன.
முன்னதாக இதேபோன்ற பிரச்சனை – spam முதல் கிரிப்டோகரன்சியான பிட்காயின் உருவாக்கத்தை பாதித்தது. இதனால் Spam மின்னஞ்சல்கள், மோசடி
போன்ற சிக்கல்களுடன் நிதி அமைப்புகள் (Traditional financial systems) போராடின.
சடோஷி நகமோட்டோ
பிட்காயினை உருவாக்கிய
சடோஷி
நகமோட்டோ, பிளாக்செயின்
தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். இந்த தொழில்நுட்பம் நகலெடுப்பதைத் தடுத்து spam
போன்ற செயல்பாடுகளை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்கி கொடுக்கப்பட்ட லெட்ஜரில்
(ledger) மட்டுமே பரிவர்த்தனைகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டன.
இது Spamஆல் ஏற்பட்ட பிரச்சனை, ஒரு புதுமையான தீர்வுக்கு எவ்வாறு உதவியது என்பதை
எடுத்துக்காட்டுகிறது. பிளாக்செயின் தொழில்நுட்பம் கிரிப்டோகரன்சிகளுக்கு அப்பால்
விரிவடைந்து, அதன் பாதுகாப்பு
மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக பல்வேறு துறைகளில் பயன்படுகிறது.
கடந்த காலத்திலிருந்து கற்று செயலில் ஈடுபடுவது எதிர்காலத்தில் தகவல்
தொடர்புக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கலாம்.