ரத்தன் டாடாவின் பெயரில் கிரிப்டோ மோசடி! | TATA CRYPTO NEWS
கிரெடிட் கார்டு மோசடி, டெபிட் கார்டு மோசடி போன்ற வகையில் அதிக
லாபம் தரும் கிரிப்டோவிலும் பெரிய தொழிலதிர்பர்களின் பெயரை
பயன்படுத்தி மோசடி நடைப்பெற்றுள்ளது.
இதைப்போன்று இந்தியாவின் பிரபலமான மிகப்பெரிய தொழிலதிபர் ரத்தன்
டாடா-வின் பெயரை பயன்படுத்தி கிரிப்டோ மோசடி நடைபெற்றுள்ளது. இந்த
மோசடி ரத்தன் டாடா மற்றும் அவரது குடுத்பத்தினரிடையே அதிர்ச்சி
அடைய செய்துள்ளது.
கடந்த வாரத்தில் சமூக வலைதளத்தில் டிவி நேரலையில் விவாதிப்பது
போன்ற காட்சி தீயாய் பரவியது, அதில் ரத்தன் டாடா அவர்கள் கிரிப்டோ
கரன்சியில் முதலீடு செய்துள்ளார், இதனால் பல கோடி இந்தியர்கள் வேலை
வாய்ப்பு பெறுவார்கள் என இடம் பெற்றிருந்தது. இதை பார்த்த ரத்தன் டாடா
மிகவும் அதிர்ச்சி அடைத்தார்.
பின்பு அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் மூலம் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டார். அதில் நான் கிரிப்டோவில் எந்தவொரு முதலீடும்
செய்யவில்லை எனவும், என் பெயர் பயன்படுத்தி வரும் செய்திகள்,
விளம்பரங்களை யாரும் நம்ப வேணாம் எனவும், இது முழுக்க முழுக்க
மக்களை ஏமாற்றும் வேலை என பதிவு செய்து இருந்தார்.
மேலும் அவர்
அனைத்து நெட்டிசன்களும் இது குறித்து விழிப்புணர்வோடு இருக்குமாறு
கூறினார்.
எனவே சமூக வலைத்தளத்தில் வருவதை அப்படியே நம்ப வேண்டாம்.