COINBASE நிறுவனம் அமெரிக்காவில் நான்கு மாநிலங்களில் ஸ்டாக்கிங் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது
அமெரிக்காவில் செயல்படும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான
COINBASE கலிபோர்னியா, நியூ ஜெர்சி, தென் கரோலினா மற்றும்
விஸ்கான்சின் ஆகிய நான்கு மாநிலங்களில் ஸ்டாக்கிங் சேவைகளை
தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் தனது
வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது.
ஜூலை 14 அன்று Coinbase வெளியிடப்பட்ட வலைப்பதிவு அறிக்கையில்,
பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள பயனர்களுக்கு சில ஸ்டேக்கிங்
சேவைகள் தற்காலிகமாக கிடைக்காது என்று தெரிவித்தது. உள்ளூர்
அதிகாரிகளால் எடுக்கப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கையின் காரணமாக
இந்த முடிவுக்கு COINBASE தூண்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
யு.எஸ். செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனால் (SEC) Coinbase க்கு
எதிராக வழக்கு ஒன்று கடந்த ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் COINBASE அதன் ஸ்டேக்கிங் சேவைகள் மூலம் பதிவு
செய்யப்படாத பத்திரங்களை வழங்குவதாக குற்றம் சாட்டாப்பட்டது.
இந்த வழக்கிற்கு பதிலளிக்கும் வகையில் கலிபோர்னியா, நியூ ஜெர்சி,
தென் கரோலினா மற்றும் விஸ்கான்சின் ஆகிய நான்கு மாநிலங்களில்
ஸ்டாக்கிங் சேவைகளை தற்காலிகமாக Coinbase நிறுவனம் நிறுத்தியது.
மேலும் SEC இன் இந்த வழக்கின் விளைவாக, பத்து அமெரிக்க
மாநிலங்களில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகள் தங்கள் மாநிலத்தின்
சொந்த சட்ட நடவடிக்கைகளைத் COINBASE நிறுவனத்திற்கு எதிராக
தொடங்கின.
அவர்களின் சொந்த சட்ட நடவடிக்கைகளின் படி ஸ்டேக்கிங் சேவைகளை
பத்திரங்களாக வகைப்படுத்துவதில் COINBASE உடன்படவில்லை. மேலும்
குறிப்பிட்ட சேவைகளின் இடைநிறுத்தத்திற்கு இது காரணமாக இருக்கும்
என்று கருதினர்.
இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தந்த மாநிலங்கள் வழங்கிய
அதிகார உத்தரவுகளுக்கு முழுமையாக கட்டுப்படுவதாக
உறுதியளித்துள்ளனர்.
முக்கியமாக, கலிபோர்னியா, நியூ ஜெர்சி, தெற்கு கரோலினா மற்றும்
விஸ்கான்சினில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே ஸ்டேக்கிங் சேவைகளின்
தற்காலிக இடைநிறுத்தபட்டுள்ளது.
அலபாமா, இல்லினாய்ஸ், கென்டக்கி, மேரிலாந்து, வெர்மான்ட் மற்றும்
வாஷிங்டன் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வசிக்கும் பயனர்களளுக்கு
ஸ்டேக்கிங் சேவைகளின் இடைநிறுத்தத்தால் எந்தவொரு பாதிப்பும்
இல்லை எனவும் முன்பு போலவே ஸ்டாக்கிங் சேவைகளையும்,
கிரிப்டோகரன்சிகளையும் தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் COINBASE
நிறுவனம் தெரிவித்துள்ளது.