Grayscale நிறுவனத்திற்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் பிட்காயின் விலை உயர்கிறது
இன்று அமெரிக்காவில் வெளியான தீர்ப்பில் Grayscale நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்க பட்டுள்ளது .
இன்று , கிரேஸ்கேல் பிட்காயின் அறக்கட்டளையை ETF ஆக மாற்றுவதற்கான நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரித்த செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் கிரேஸ்கேலுக்கு பக்கபலமாக இருந்து தீர்ப்பு வழங்கியுள்ளது
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நிதியை நிர்வகிக்கும் கிரேஸ்கேல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஜூன் 2022 இல் SEC க்கு எதிராக தனது வழக்கைத் தொடங்கியது, அதன் டிக்கர் GBTC ஆல் நன்கு அறியப்பட்ட அதன் முதன்மையான பிட்காயின் நிதியை ETF ஆக மாற்றுவதற்கான விண்ணப்பத்தை நிறுவனம் நிராகரித்தது. தீர்ப்பு பல தாமதங்களை எதிர்கொண்டது, அடுத்த நடவடிக்கைகளைத் தீர்மானிக்க நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம்” என்று SEC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனாலும் இன்று Grayscaleக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது .
இந்த Spot bitcoin ETF தீர்ப்பு வருங்காலத்தில் பெரிய நிறுவனங்களை பிட்காயின் முதலீடு பக்கம் ஈர்க்கலாம் என்று பெரிய வர்த்தகர்கள் மத்தியில் கூறப்படுகிறது. எனவே க்ரிப்டோவில் அதிக முதலீடு வர வாய்ப்புள்ளது .
இதன் காரணமாக இன்று 26000$ -இல் வர்த்தகம் ஆகி கொண்டிருந்த பிட்காயின் சில நிமிடங்களில் 27000$ ஐ தொட்டது ஆனாலும் நிறைய முதலீட்டாளர்கள் இந்த செய்திக்கு பிறகு வர தொடங்கியதால் பிட்காயின் சந்தை 28000$ ஐ தொட்டு வர்த்தகம் ஆகி கொண்டிருக்கிறது . அதனை தொடந்து மற்ற ஒரு சில காயின்களும் விலை ஏறி கொண்டிருக்கிறது . இது கிரிப்டோ வர்த்தகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணமாகும் . இன்னும் பிட்காயின் விலை உயரும் என்று நம்பப்படுகிறது .