கிரிப்டோ மார்க்கெட்டில் எப்போது முதலீடு செய்தால் அதிக அளவு பணம் சம்பாதிக்கலாம்?

0

கிரிப்டோ மார்க்கெட்டில் எப்போது முதலீடு செய்தால் அதிக அளவு பணம் சம்பாதிக்கலாம் 

பொதுவாக கிரிப்டோ மார்க்கெட் என்பது அதிக அளவு ஆபத்து நிறைந்த சந்தையாகும் . ஆனாலும் க்ரிப்டோ மார்க்கெட்டில் முதலீடு செய்ய, இந்த மார்க்கெட் பற்றி தெரிந்தவர்கள் தயங்குவதில்லை . காரணம் மற்ற எந்த ஒரு மார்க்கெட்டிலும் கிடைக்காத லாபம் மற்றும் நஷ்டம் இந்த மார்க்கெட்டில் மட்டுமே வரும்.

இந்த க்ரிப்டோ மார்க்கெட்டில் ஆயிரம் கணக்கில் முதலீடு செய்து பல லட்சங்கள் சம்பாதித்தவர்களும் அதிகம் உண்டு , அதை போல் பல லட்சம் இழந்தவர்களும் இங்கு உண்டு . அந்த அளவு ஆபத்து நிறைந்த சந்தையாகும் .

உலக அளவில் அதிகரித்து கொண்டிருக்கும் பண வீக்கத்திற்கும் , வங்கிகள் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், பல நாடுகளுக்கு மிக குறைந்த செலவில் வேகமாக பண பரிமாற்றம் செய்யவும் மற்றும் பல காரணங்களுக்காகவும் பிளாக்செயின் தொழில்நுட்பம்  மற்றும் கிரிப்டோ காயின்கள்  ஒரு தீர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது . இதனாலயே பெரும் பணக்காரர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் பிட்காயினில் முதலீடு செய்து வருகிறர்கள் . WEB 3 தொழில்நுட்பமும் மிக வேகமாக பெரும்பாலான நாடுகளில் பரவி வருகிறது .

ஆனால் கிரிப்டோ வர்த்தகம் என்பது பல ஆயிர கணக்கான காயின்களை உள்ளடக்கியது. இதில் பெரும்பாலான காயின்கள் பொழுது போக்கிற்காகவும் , வர்த்தக நோக்கிற்காகவும் உருவாக்கியதாக இருக்கும் . எதிர்கால நோக்கத்திற்காகவும் , வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை சார்ந்தும், எதோ ஒரு வகையில் மக்களுக்கு பயன்படும் விதத்திலும் உருவாக்க பட்ட காயின்கள் மிக குறைவு ஆகும் .

கிரிப்டோவில் முதலீடு செய்யும் போது நாம் பல காரணிகளை பார்த்து தான் முதலீடு செய்ய வேண்டும். இல்லையென்றால் மொத்த பணமும் கூட நஷ்டம் ஆகலாம் .

இந்த பதிவில் பழைய வரலாறு அடிப்படையில் பிட்காயின் மற்றும் ஆல்ட் காயின்கள் எப்போது அதிக அளவில் லாபம் கொடுத்துள்ளது , மற்றும் எதிர்காலத்தில் எப்போது லாபம் தரலாம் என்பதை பற்றி பார்ப்போம் .

கிரிப்டோ முதலீடுகள் பெரும்பாலும் கிரிப்டோ சைக்கிள் படி இருக்க வேண்டும். அதாவது பிட்காயின் ஹால்விங்ஐ பொறுத்து முதலீடு செய்யும் முறையாகும் . காரணம் இதுவரை கிரிப்டோ சந்தை இந்த முறையை பின்பற்றியே உயர்ந்துள்ளது . Bitcoin Halving நேரம் bitcoin minners க்கு கொடுக்க படும் வெகுமதி பாதியாக குறைவதால் பிட்காயின் விலை அந்த வருடம் வெகுவாக உயர்கிறது .

இதனை எளிதாக புரியும் படி சொல்லவேண்டுமானால் , ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை BITCOIN HALVING நடக்கும் . அதனை பொறுத்து மார்க்கெட்டில் நடந்த ஏற்ற இறக்கங்களை பொருத்தும் பின்வரும் பதிவுகளை பகிர்ந்துள்ளோம் 

அதிக நஷ்டம் தரும் பியர் மார்க்கெட் [கரடி சந்தை வருடங்கள் ]

2014, 2018, 2022, 2026

இந்த வருடங்களில் பணத்தை முதலீடு செய்யாமல் வைத்திருப்பது நல்லது . அல்லது stable காயின் staking செய்து வைப்பது நல்லது . சிறிய அளவில் வட்டி கிடைக்கும் .

2015, 2019, 2023, 2027 [PRE HALVING YEARS]

இந்த நேரத்தில் சிறிய அளவில் பிட்காயினில் முதலீடு செய்யலாம் . ஓரளவு லாபம் சம்பாதிக்க முடியும் . இது ACCUMULATION ZONE என்பார்கள் .

2016, 2020, 2024, 2028 [Halving Years]

இந்த வருடங்களில் பிட்காயின் வளர்ச்சி அதி வேகமாக இருக்கும். கடந்த 2020 ஆம் ஆண்டு 10 மடங்கிற்கு மேல் லாபம் கொடுத்தது என்பது குறிப்பிடதக்கது .

ஆனால் சில நேரங்களில் கீழ் இறங்கி உயர தொடங்கும், சில நேரங்களில் மட்டும் இருக்கும் விலையில் இருந்தே உயரும். ஆனால் பழைய வரலாறு படி விலை உயர்ந்தே தீரும் . இதனை பின்பற்றி பிட்காயினில் முதலீடு செய்து நஷ்டமடைந்தவர்கள் யாரும் இல்லை என்பதே வரலாறு. பிட்காயின் சார்ட்டை பார்த்தால் உங்களுக்கே புரியும் .

2017, 2021, 2025 [POST HALVING YEARS]

பிட்காயினின் விலை உயர்வு ஒரு கட்டத்தில் குறைய தொடங்கும் அப்போது ஆல்ட் காயின்கள் விலை உயர தொடங்கும். சில காயின்கள் நம் எண்ணத்திற்கு எட்டாத அளவு கூட விலை உயரும் . இது பெரும்பாலும் halving முடிந்த அடுத்த வருடமே நிகந்துள்ளது .

பழைய வரலாறு  படி 2024, 2025 ஆம் ஆண்டுகள் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தரும் வருங்களாக இருக்கலாம்,

குறிப்பு : மேலே சொல்ல பட்ட தகவல்கள் அனைத்தும் பழைய வரலாறுகளின் அடிப்படையில் எழுத பட்டதாகும் . பழைய வரலாறு படி எதிர்காலத்திலும் நடக்குமா என்பது யாராலையும் உறுதியாக சொல்ல முடியாது . காரணம் க்ரிப்டோ க்கு ஆதரவாக அல்லது எதிராக வரும் செய்திகள் , கிரிப்டோ வளர்ச்சி அல்லது வீழ்ச்சியை தீர்மானிக்கலாம் . அதை போல் சில வளர்ச்சி அடைந்த நாடுகளின் மற்றும் பெரிய நாடுகளின் அரசாங்கம்  எடுக்கும் நடவடிக்கைகளை பொருத்தும் கிரிப்டோவின் எதிர்காலம் தீர்மானிக்க படலாம். எனவே  உங்கள் முதலீடு ஆலோசகர் அறிவுரையை பின்பற்றி முதலீடு செய்யவும் . நாங்கள் இதனை கல்வி நோக்கத்திற்காக பகிர்ந்துள்ளோம் .

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்,  நீங்கள் இதில் ஏதேனும் புதிதாக கற்றிருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை பகிரவும் . உங்கள் ஆதரவுக்கு நன்றி .

Leave a Reply

  • bitcoinBitcoin (BTC) $ 62,123.00 0.77%
  • ethereumEthereum (ETH) $ 2,435.24 0.19%
  • tetherTether (USDT) $ 0.999470 0.02%
  • bnbBNB (BNB) $ 581.99 1.25%
  • solanaSolana (SOL) $ 142.80 1.12%
  • usd-coinUSDC (USDC) $ 1.00 0.04%
  • xrpXRP (XRP) $ 0.532576 0.28%
  • staked-etherLido Staked Ether (STETH) $ 2,434.60 0.17%
  • dogecoinDogecoin (DOGE) $ 0.109822 1.83%
  • tronTRON (TRX) $ 0.160087 2.27%
  • the-open-networkToncoin (TON) $ 5.22 0.23%
  • cardanoCardano (ADA) $ 0.342145 2.75%
  • avalanche-2Avalanche (AVAX) $ 26.41 1.02%
  • shiba-inuShiba Inu (SHIB) $ 0.000018 0.17%
  • wrapped-stethWrapped stETH (WSTETH) $ 2,873.66 0.14%
  • wrapped-bitcoinWrapped Bitcoin (WBTC) $ 62,049.00 0.64%
  • wethWETH (WETH) $ 2,433.99 0.05%
  • chainlinkChainlink (LINK) $ 10.69 4.16%
  • bitcoin-cashBitcoin Cash (BCH) $ 325.74 0.91%
  • polkadotPolkadot (DOT) $ 4.10 1.41%
  • daiDai (DAI) $ 0.999848 0.06%
  • leo-tokenLEO Token (LEO) $ 5.98 0.04%
  • uniswapUniswap (UNI) $ 7.22 0.61%
  • nearNEAR Protocol (NEAR) $ 4.87 2.91%
  • suiSui (SUI) $ 1.90 6.49%
  • litecoinLitecoin (LTC) $ 65.61 0.07%
  • aptosAptos (APT) $ 9.11 1.21%
  • bittensorBittensor (TAO) $ 597.93 6.14%
  • pepePepe (PEPE) $ 0.000010 0.05%
  • wrapped-eethWrapped eETH (WEETH) $ 2,553.07 0.13%
  • internet-computerInternet Computer (ICP) $ 7.98 1.36%
  • fetch-aiArtificial Superintelligence Alliance (FET) $ 1.41 1.63%
  • kaspaKaspa (KAS) $ 0.134319 1.35%
  • first-digital-usdFirst Digital USD (FDUSD) $ 1.00 0.01%
  • polygon-ecosystem-tokenPOL (ex-MATIC) (POL) $ 0.375801 0.02%
  • moneroMonero (XMR) $ 153.00 4.48%
  • ethereum-classicEthereum Classic (ETC) $ 18.38 0.79%
  • stellarStellar (XLM) $ 0.090379 1.04%
  • okbOKB (OKB) $ 43.15 2.01%
  • blockstackStacks (STX) $ 1.70 2.17%
  • dogwifcoindogwifhat (WIF) $ 2.52 0.76%
  • ethena-usdeEthena USDe (USDE) $ 0.998387 0.04%
  • immutable-xImmutable (IMX) $ 1.43 2.23%
  • filecoinFilecoin (FIL) $ 3.61 2.94%
  • aaveAave (AAVE) $ 141.66 2.77%
  • render-tokenRender (RENDER) $ 5.28 0.33%
  • crypto-com-chainCronos (CRO) $ 0.076539 1.68%
  • optimismOptimism (OP) $ 1.63 1.2%
  • fantomFantom (FTM) $ 0.702306 2.33%
  • mantleMantle (MNT) $ 0.600971 0.32%