டெஸ்லாவின் டிஜிட்டல் சொத்துக்கள் மதிப்பு $184 மில்லியன் டாலர்
டெஸ்லாவின் டிஜிட்டல் சொத்துக்கள் மதிப்பு 2023 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டின் படி இருப்புநிலைக் குறிப்பில் $184 மில்லியன் டாலர் உள்ளது. இதில் முதன்மையாக பிட்காயின் உள்ளது.
பிப்ரவரி 2021ஆம் ஆண்டு டெஸ்லா $1.5 பில்லியன் மதிப்புள்ள பிட்காயினை வாங்கியதாக அறிவித்தது. உலகின் மிக முக்கியமான மின்சார வாகன உற்பத்தியாளர்களில் ஒருவரான எலான் மஸ்க் என்பதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
2022 இன் இரண்டாவது
காலாண்டில், டெஸ்லா அதன் பிட்காயின் பங்குகளில் கிட்டத்தட்ட 75% –ஐ விற்றது.
இதனால் டெஸ்லா நிறுவனத்தின் டிஜிட்டல் சொத்துக்களின் இருப்புநிலை அதன் ஒட்டுமொத்த மதிப்பான $1.5 பில்லியனில் இருந்து $218 மில்லியனாகக் குறைத்தது.
மீண்டும் 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், டெஸ்லா தனது டிஜிட்டல் சொத்துக்களை $218 மில்லியனில் இருந்து $184 மில்லியனாகக் குறைத்தது.
2023 ஆம் ஆண்டு இரண்டாவது
காலாண்டின் நிலவரப்படி, டெஸ்லாவின் இருப்புநிலை மதிப்பு இன்னும் $184 மில்லியன் மதிப்புள்ள டிஜிட்டல் சொத்துகளாக உள்ளது.
TESLA DIGITAL CURRENCY HOLDINGS
இதன் மூலம் 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டு வரை டெஸ்லா நிறுவனம் அதன் பங்குகளில் எந்த கூடுதல் மாற்றங்களையும் செய்யவில்லை என்பது தெரிகிறது.
கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் அதன் ஆதாயங்களைப் பதிவு செய்வதைத் தடுக்கும் கணக்கியல் விதிமுறைகள் காரணமாக இந்த காலாண்டு முழுவதும் இந்த மதிப்பு மாறாமல் இருந்தது.
அந்த நேரத்தில் பிட்காயினின் விலை சுமார் 7% அதிகரித்த போதிலும், டெஸ்லாவால் அதன் நிதிநிலை அறிக்கைகளில் இந்த ஆதாயங்களை பிரதிபலிக்க முடியவில்லை.
மேலும் இந்தக் காலகட்டம் முழுவதும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், Dogecoin மீது ஆர்வம் காட்டினார் என்பது குறிபிடத்தக்கது.
மஸ்க்க்கு Dogecoin மீது விருப்பம் இருந்தாலும், கிரிப்டோகரன்சிகளை வாங்கவோ அல்லது Dogecoin மீது அதிக அளவில் பந்தயம் கட்டவோ யாரையும் அறிவுறுத்தவில்லை என பல சர்சைகளுக்கு பிறகு அவர் கூறினார்.