டிரம்ப் வெற்றி பிட்காயின் ஆல்ட் காயின் நிலவரம் என்ன?
இன்று அமெரிக்கா தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார் . இதனால் பிட்காயின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது . இது ஆல்ட் காயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பார்ப்போம்.
டிரம்ப் பிட்காயின் பற்றி பேசியுள்ளதால் பிட்காயின் விலை வேகமாக ஏறி வருகிறது . கடந்த இரண்டு நாளில் மட்டும் 5000$ மேல் விலை உயர்ந்துள்ளது . விரைவில் 100K$ என்ற இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்க படுகிறது.. அதே போல் தங்கம் விலையும் இறங்க தொடங்கியுள்ளது காரணம் அமெரிக்கா டாலர் மதிப்பு உயர தொடங்கியுள்ளது .
டிரம்ப் வெற்றி பெற்ற ஒரே நாளில் மார்க்கெட்டில் பல ஏற்ற இறக்கங்கள் நடந்து கொண்டிருக்கிறது . எலான் மாஸ்க் பிட்காயின் வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான் . அவரும் அமெரிக்கா டிரம்ப் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்துத்தார் என்பது குறிப்பிட தக்கது .
எனவே பிட்காயின் விலை உயர்வது நிச்சயம் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் இவர்களை போன்ற பெரிய முதலீட்டாளர்கள் மற்ற காயின்களில் அவ்வளவு எளிதாக முதலீடு செய்ய மாட்டார்கள் . எனவே இப்போது மற்ற காயின்கள் விலை ஏற வாய்ப்பு குறைவு .
bitcoin dominance உயர்ந்து கொண்டே செல்கிறது, காரணம் இப்போது சந்தையில் பிட்காயினில் தான் அதிக நபர்கள் முதலீடு செய்கிறார்கள் . எனவே இன்னும் சில காலங்கள் பிட்காயின் முதலீடு தான் அதிகம் வர வாய்ப்பு அதிகம் . அதன் பிறகு தான் ஆல்ட் காயிங்களில் முதலீடு வர வாய்ப்பு அதிகம்.. எனவே ஆல்ட் காயின்களில் முதலீடு செய்தோர் இன்னும் சில காலம் பொறுமை காக்க வேண்டி இருக்கும் .
இன்னும் சிலருக்கு இப்போது ஆல்ட் காயின்களில் முதலீடு செய்யலாமா என்ற சந்தேகம் உண்டு. அதற்கான பதில் நிச்சயமாக பண்ணலாம் என்பதாகும்.